நடிகர் தனுஷ் தற்போது “வாத்தி” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்க படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்து வருகிறார்.
unknown nodeவிரைவில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது. இதனையடுத்து, இன்று தனுஷ் பிறந்த நாள் என்பதால், படத்திற்கான முதல் பார்வை நேற்று வெளியிடபட்டிருந்தது.
unknown nodeஇதனை தொடர்ந்து, இந்த திரைப்படத்தின் படத்தின் டீசர் இன்று வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது படத்திற்கான அந்த அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது.
unknown nodeடீசரில், இதுவரை இல்லாத விதமாக தனுஷ் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். படத்தின் கதைக்களமும் அருமையாக இருப்பதால், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
unknown nodeஇந்த திரைப்படத்தில் சாய் குமார், தணிகெல்ல பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, மேலும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node