அமரன் முடிஞ்சது.."கூலி ஷூட்டிங் போறேன்"!உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்!

கூலி படத்தின் படப்பிடிப்பு தன்னுடைய வீட்டிற்கு அருகே நடந்து வருவதாக நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் போது நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

coolie rajinikanth sk

சென்னை :சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை ரஜினியைப் போலப் பல நிகழ்ச்சிகளில் பேசியும் ரஜினி தான் தன்னுடைய குரு என்று கூறி நாம் பார்த்திருக்கிறோம். சினிமாவிற்குள் வந்தபிறகும் அவருடைய படங்கள் வெளியானால் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துவிடுவார்.

இப்படி அவர் மீது அன்பாக இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு முறையாவது ரஜினியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிப்பாரா என்பது தான் ரசிகர்களுடைய பெரிய ஆசையாகவும் இருந்து வருகிறது. எனவே, ரஜினி சமீபகாலமாக நடிக்கும் புது படங்களில் சிவகார்த்திகேயனும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருந்தது.

குறிப்பாக, ஜெயிலர் படத்திலும், ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் கூலி படத்திலும் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், ஜெயிலர் படம் வெளியான பிறகு அவர் படத்தில் நடிக்கவில்லை என்பது தெரிய வந்தது. இந்நிலையில், அதனைத்தொடர்ந்து தற்போது கூலி படத்திலும் தான் நடிக்கவில்லை என்பதை அமரன் படத்திற்காகக் கலந்துகொண்ட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர் ” நான் கூலி படத்தில் நடிக்கவில்லை. ஆனால், விரைவில் கூலி ஷூட்டிங்கிற்கு தலைவர் ரஜினிகாந்த்தைப் பார்க்கச் செல்வேன்.படத்தின் படப்பிடிப்பு இப்போது என்னுடைய வீட்டிற்கு அருகில் நடந்து வருகிறது.

எனவே அமரன் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு நான் கூலி ஷூட்டிங்கிற்கு சென்று ரஜினிகாந்த்தைப் பார்த்து ரசிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். படத்தில் அவருடன் நடிக்க இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் படப்பிடிப்பிற்குச் சென்று ரஜினிகாந்த்தைப் பார்க்கும் அளவிற்கு சிவகார்த்திகேயன் ரஜினி மீது வைத்துள்ள அன்பு இதன் மூலம் தெரியவந்துள்ளது.