நான் பிரியங்கா ஆளா? கடுப்பாகி மணிமேகலை பிரச்சனைக்கு விளக்கம் கொடுத்த குரேஷி!
பிரியங்கா பிரச்சனையில் மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்து செய்திருந்ததை கமெண்ட்டை எதற்காக டெலிட் செய்தேன் என்பதற்கான விளக்கத்தை குரேஷி கொடுத்திருக்கிறார்.
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மணிமேகலை விலகியுள்ளது பேசுபொருளாகியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருவதால் பிரச்சனை முடிந்தபாடு இல்லை.
இந்த விவகாரத்தில் மணிமேகலை விலகியதை தொடர்ந்து நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டுள்ள குரேஷி மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்து செய்திருந்த கமெண்ட்டை டெலிட் செய்திருந்தார். அதனை பார்த்த, பலரும் குரேஷி பிரியங்கா ஆதரவாளர், அதனால் தான் டெலிட் செய்துவிட்டார் என விமரிசிக்க தொடங்கினார்கள்.
இந்த சூழலில், ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த பிரச்சனைகள் பற்றி விவரமாக பேசி குரேஷி விளக்கம் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து, மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்து டெலிட் செய்த கமெண்ட்ஸ் பற்றியும் பேசி விளக்கம் கொடுத்துள்ளார்.
மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியபிறகு அவருடைய அடுத்த பயணம் அவருக்கு நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக தான் குரேஷி நல்ல மனதுடன் வாழ்த்து சொன்னாராம். வாழ்த்து கூறியதற்கு மணிமேகலை தரப்பில் இருந்து லைக் செய்து நன்றி கூட தெரிவிக்கவில்லையாம். இது குரேஷிக்கு வேதனையாகவும் இருந்ததாம்.
குரேஷி வாழ்த்து தெரிவித்து போட்டுள்ள அந்த கமெண்ட்ஸ் கீழ், பலரும் நீ பிரியங்கா ஆள் தானே, அவருடைய சொம்பு தானே என விமர்சித்து பேசியிருந்ததையும் குரேஷி கவனித்துள்ளார். இதன் காரணமாக தான் சற்று கடுப்பாகி அந்த கமெண்ட் இருப்பதால் தானே இப்படியான விமர்சனங்கள் வருகிறது அது இருக்கவே வேண்டாம் என டெலிட் செய்துவிட்டாராம்.
அதைப்போல, இன்ஸ்டாகிராமில் இந்த பிரச்சனைக்கு பிறகு மணிமேகலையை குரேஷி அன் பாலோவ் செய்துவிட்டதாகவும் பேச்சுக்கள் எழுந்தது. அதற்கும் விளக்கம் கொடுத்த குரேஷி ” நானும் மணிமேகலையும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்தது இல்லை. அவருடைய நம்பர் என்னிடம் இருப்பதால் எதாவது வேலை விஷயமாக இருந்தால் மட்டும் தான் பேசுவோம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.