கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென் ,பார்த்திபன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
unknown nodeகி.பி. 1279 இல் நடந்த சோழர் ஆட்சியில் நடந்த சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பாதி மக்களுக்கு படம் புரியவில்லை. இதனால் படம் அப்போது பெரிதளவில் பேசப்பட வில்லை.
இதையும் படியுங்களேன்-தீபாவளி அன்று விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்.!
unknown nodeபிறகு ரீ-ரிலீசான பின் இந்த மாதிரி ஒரு படத்தை கொண்டாட மறந்துவிட்டோம் என பலரும் வருத்தப்பட்டது உண்டு. இதனால் இயக்குனர் செல்வராகவன் மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளார். அதில் தனுஷ் நடிப்பார் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 2ஆம் பாகத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.
unknown nodeஇதற்கிடையில், சமீபத்திய ஒரு பேட்டியில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தோல்வியால் அந்த கடனை கட்டவே தனக்கு 10 ஆண்டுகள் ஆனதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் 60% மட்டும் தான் பங்களிப்பு செய்தார். மீதம் 40% பணத்தை நான் தான் போட்டு எடுத்தேன். படம் தோல்வியடைந்ததால், அந்த கடனை திருப்பி கட்டவே எனக்கு 10 ஆண்டுகள் ஆனது” என்று தெரிவித்துள்ளார்.