ரூ.1.5 கோடி நிதி கொடுத்த அக்‌ஷய்குமார்.! எங்களுக்கு கடவுள் இவர்தான் என்று புகழ்ந்த லாரன்ஸ்.!

ராகவா லாரன்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். அது தற்போது 15ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் வீடில்லாத திருநங்கைகளுக்கு

ராகவா லாரன்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். அது தற்போது 15ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் வீடில்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் பணியை தொடங்கியுள்ளது அவரது அறக்கட்டளை. பின்னர் இதற்காக லக்‌ஷ்மி பாம் படப்பிடிப்பின் போது நடிகர் அக்‌ஷய்குமாரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனே ரூ.1.5 கோடி நிதி கொடுப்பதாக அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.

unknown node

இந்த தகவலை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராகவா லாரன்ஸ், உதவி செய்பவர்கள் அனைவரும் கடவுள் தான். அந்த வகையில் எங்களுக்கு அக்‌ஷய்குமாரும் கடவுள் தான் என்றும் இத்திட்டத்துக்கு உதவிய அவருக்கு நன்றி. திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் இத்திட்டத்தை இந்தியா முழுக்க அக்‌ஷய்குமாரின் ஆதரவோடு எடுத்துச் செல்வோம். இதற்கு விரைவில் பூமி பூஜை தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.