அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ஹெச்.வினோத் இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
unknown nodeஇன்னும் 61-வது படத்திற்கான படப்பிடிப்பே தொடங்கவில்லை அதற்குள் அஜித்தின் 62-வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகி விட்டது. அதன்படி, அஜித்தின் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
unknown nodeவிக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு தற்காலிகமாக AK62 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ” எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் மதிப்புமிக்க AK62 க்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற இந்த சிறந்த வாய்ப்புக்கு நன்றி அஜித் சார் வார்த்தைகளால் மகிழ்ச்சியை விளக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.
எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்❤️????
காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் ????????Thank U #AjithSir for this greatest opportunity to work with you for the prestigious #AK62
Words can’t explain the happiness ????
With my king @anirudhofficial again ???? & @LycaProductions ☺️???? pic.twitter.com/xFnT8jGSEf
— Vignesh Shivan (@VigneshShivN) March 18, 2022