பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வில்லனாத நடித்து தமிழ் சினிமாவிற்கு தெரிந்த முகமாக உள்ளார் பாலிவுட் முன்னனி நடிகர் அக்ஷ்ய்குமார். இவர் பாலிவுட்டில் நடித்த பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளன. தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் பாலிவுட் ரிமேக்கில் இவர் தான் நடித்திருந்தார். அந்த படத்ததை பிரபுதேவா இயக்கி இருந்தார்.
unknown nodeஇவர் நடிப்பில் அடுத்ததாக குட் நியூஸ் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ் மேக்தா இயக்கி வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மனைவியும், முன்னனி நடிகையுமான கரீனா கபூர் கான் நடிக்கிறார். இந்த படம் செப்டம்பர் 9இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
DINASUVADU