அனல் பறக்கும் தல  அஜித்தின் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்.! பொருளாதாரா அடிப்படையில் ஒருவரின் குணத்தை மதிப்பிட கூடாது.!

ஒருவரை அவரின் பொருளாதார நிலை கொண்டு அவரின் குணத்தை மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும். - அஜித்தின் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்.

ஒருவரை அவரின் பொருளாதார நிலை கொண்டு அவரின் குணத்தை மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும். – அஜித்தின் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்.

கடந்த சில தினங்களாக இணையத்தில் அஜித் வைத்திருந்த வாட்ஸாப் ஸ்டேட்டஸ் என ஒரு குறுந்தகவல் வெளியானது. அது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரது மத்தியிலும் மிகவும் பிரபலமானது.

வலிமை படத்தில் அஜித் உடன் இணைந்து நடித்த ராஜ ஐயப்பா என்பவர் தான் இந்த ஸ்டேட்டஸை பகிர்ந்துள்ளார். அஜித்தின் அனுமதியோடு அஜித்தின் வாட்ஸாப் ஸ்டேட்டஸை ராஜ ஐயப்பா இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node

அதில், ஒருவரின் பொருளாதார நிலை வைத்தே ஏழை, பணக்காரன், நடுத்தர வர்க்கம் என பிரித்து பார்க்கப்படுகிறது. நல்லவர் கெட்டவர் என்பது அனைவரிடத்திலும் உள்ளது. ஆதலால், ஒருவரை அவரின் பொருளாதார நிலை கொண்டு அவரின் குணத்தை மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும். அனைவரும் விழித்துக்கொள்ளுங்கள் என தல அஜித் வாட்ஸாப் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார்.

தல அஜித்தின் இந்த வாட்ஸாப் ஸ்டேட்டஸ் அறிவுரை பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. அஜித் நடிப்பில் அடுத்ததாக H.வினோத் இயக்கியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் தினத்திற்கு வெளியாக உள்ளது.