செம ஸ்டைலில் அஜித்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ” AK61″ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

unknown node

படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்புராயனும், சுப்ரிம் சுந்தரும் பணியாற்றி வருகிறார்கள். படத்தில் நடிகை மஞ்சுவாரியர், நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் வீரா என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

unknown node

வலிமை படத்தை போலவே இந்த படத்திற்கும் அப்டேட் கொடுக்காததால் ரசிகர்கள் சோகத்துடன் அப்டேட் கேட்டு வருகிறார்கள். படத்திற்கான படபிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்றுவந்தது வந்த நிலையில், அங்கு இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்படவுள்ளது. அது முடிந்த பிறகு, அடுத்த கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெறவுள்ளது.

unknown node

இந்நிலையில் நடிகர் அஜித் ஸ்டைலான லுக்கில் பெல்ஜியம் , லண்டன் என அஜித் சுற்றி வரும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இதனையடுத்து, லண்டனில் கடை ஒன்றில் ஷாப்பிங் சென்ற அஜித், தனது கார்டை கொடுத்து ஏதோ பொருள் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node
செம ஸ்டைலில் அஜித்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!