அஜித் இன்னும் பதிலளிக்கவில்லை! போனி கபூர் ட்வீட்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் ஸ்ரீ தேவியின் கணவரான போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “அஜித்துடன் 3 படங்கள் ஒப்பந்தம் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வருவதை நான் பார்க்கிறேன். அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு ஒரு ஆக்ஷன் படத்தில் பணியாற்றுகிறோம். இந்த இரண்டு படங்கள் தவிர்த்து அவருடன் ஒரு ஹிந்தி படத்தில் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால், அதற்க்கு அஜித் இன்னும் பதிலளிக்கவில்லை.” என தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Seeing false reports of 3 film deal between Ajith and me in the media. Want to straighten the record. After # Nkp we are working on the action film. While I would love to have him on board for a Hindi film, he has not confirmed anything.
— Boney Kapoor (@BoneyKapoor) July 10, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025