அஜித் ரசிகர்களை கொண்டாட்டப்படுத்திய திரையரங்கம் !!!!!
- தல அஜித் நடிப்பில் கடந்த 2017-ல் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியானபடம் “பில்லா”.
- மார்ச் 18-ம் தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் உள்ள ஜி.கே சினிமாஸில் “பில்லா” படத்தை மீண்டும் திரையிட உள்ளதாக திரையரங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
தல அஜித் நடிப்பில் வெளி வந்து வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கும் படம்”விஸ்வாசம்”.இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள்.
இந்நிலையில் தற்போது தல அஜித் “பிங்க்” ரிமேக் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தை “நேர்கொண்டபார்வை” என்ற பெயரில் எச்.வினோத் இயக்குகிறார்.மேலும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.
இந்நிலையில் தல அஜித் நடிப்பில் கடந்த 2017-ல் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியானபடம் “பில்லா”. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த் படத்தை ரசிகர்கள் மிகசிறப்பாக கொண்டாடினார்கள்.
அதற்கு பிறகு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
மார்ச் 18-ம் தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் உள்ள ஜி.கே சினிமாஸில் “பில்லா” படத்தை மீண்டும் திரையிட உள்ளதாக திரையரங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் இந்த சந்தோசத்தை கொண்டாடி வருகிறார்கள்.
Get ready #Thala fans!!! Bookings for the most stylish film #Billa as part of #PlaybackatGK will open tonight!! Show is on 18-03-2019 10 PM!! pic.twitter.com/BfzFzN1deS
— Ruban Mathivanan (@GKcinemas) March 11, 2019