தியேட்டர் முன் தீக்குளிக்க முயன்ற அஜித் ரசிகர்!

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கான டிக்கெட்டை வாங்க இரவு முழுவதும் தியேட்டரில் ரசிகர்கள்

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கான டிக்கெட்டை வாங்க இரவு முழுவதும் தியேட்டரில் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில், சத்யம் சினிமாஸில் டிக்கெட் பிரச்னையால் ரசிகர் ஒருவர் தனது உடம்பு மேல் பெட்ரோலை ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனை நடிகர் சாந்தனு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

unknown node