மங்காத்தா பாணியில் அஜித் 62.! மனம் திறந்த விக்னேஷ் சிவன்.!

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித், எச் வினோத் இயக்கத்தில் ‘AK 61’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வங்கி திருட்டு மையமாக வைத்து எடுக்கப்பட்டு

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித், எச் வினோத் இயக்கத்தில் ‘AK 61’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வங்கி திருட்டு மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. படத்தில் அஜித் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

unknown node

இந்த நிலையில், AK 62 படம் குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த விக்னேஷ் சிவன் கூறியதாவது ” AK 62 வது படத்தை மங்காத்தா பாணியில் எடுக்க முயற்சி செய்ய போகிறேன். அஜித் சார் நடித்த வாலி மற்றும் மங்காத்தா திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் மங்காத்தா படத்தின் இடைவேளையின் பொழுது அவர் மட்டுமே அந்த சீனில் வருவார்.

unknown node

மிகவும் அற்புதமாக நடித்திருப்பார். அதனால் அது போன்று வித்தியாசமான அஜித் சாரை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தி போகிறேன்” என தெரிவித்துள்ளார். இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

unknown node

மேலும், விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘காத்துவாகுல ரெண்டு காதல்’ ஏப்ரல் 28 அன்று வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.