45 வயதில் மீண்டும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளாரா ஐஸ்வர்யா ராய்?! யாரு ஹீரோ?!

தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் அறிமுகமாகி பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் மெகா ஹிட் கொடுத்து பின்னர் பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர்

தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் அறிமுகமாகி பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் மெகா ஹிட் கொடுத்து பின்னர் பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என முக்கிய மொழிகளில் நடித்தாலும் தெலுங்கில் ஹீரோயினாக நடித்ததில்லை.

unknown node

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை கத்தி படத்தின் ரீமேக்கான கைதி நெ.150 என தனது 150வது படத்தை வெற்றியோடு தொடங்கினார். அதன் பிறகு தற்போது சைரா நரசிம்மா ரெட்டி படம் தயாராகி வருகிறது. இப்படம் அக்டோபர் 2இல் வெளியாக உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார் சிரஞ்சீவி. இந்த படத்தில் நடிக்க வைக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி ஐஸ்வர்யா ராய் உறுதிப்படுத்தினால், தெலுங்கில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுக உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.