அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..??

It has been rumored that actress Aishwarya Rajesh will play Allu Arjun's younger sister.

அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது முற்றிலும் வதந்தி என்று கூறப்படுகிறது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடித்துவருகிறார். தேவ ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த செய்தி முற்றிலும் வதந்தி. புஷ்பா திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் இருக்கட்ட படப்பிடிப்பு மற்றும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.