'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்.! பூஜையுடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

It has been officially announced that Aishwarya Rajesh will be starring in the Tamil remake of The Great Indian Kitchen.

தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஆர்.கண்ணன் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.காரைக்குடியில் மார்ச் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்பட்ட இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.எம்கேஆர்கே புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் தமிழில் ஆர் கண்ணன் இயக்க உள்ளதாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பால சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய உள்ள இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.அதில் ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் கண்ணன் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

unknown node