சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து பிறகு வெள்ளி திரைக்கு வந்து பல நடிகர்கள் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களாக வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி தான் நடிகர் ரியோ ராஜ் . இவர் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் இவருடைய படங்கள் வெற்றிபெறவில்லை கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது என்றே சொல்லலாம்.
ஹரிஹரன் ராம் எஸ் என்பவருடைய இயக்கத்தில் வெளியான இந்த ஜோ திரைப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக பவ்யா திரிகா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இளைஞர்கள் கொண்டாடி தீர்த்தார்கள் என்றே கூறலாம்.
மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?
இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரியோ ராஜிற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஜோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்திற்கு ஒரு திரைப்படம் நடித்து கொடுத்து வருகிறாராம்.
அதைப்போல அந்த படத்தில் நடிக்கும் அதே சமயத்தில் தமிழ் -தெலுங்கு மொழிகளில் உருவாகும் ஒரு படத்திலும் ரியோ நடித்து வருகிறாராம். இதையெல்லாம் தவிர மற்றோரு படத்திலும் ரியோ நடிக்கிறாராம். ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ மூன்று படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
