Shankar daughter wedding:ஷங்கர் இல்லத் திருமண விழாவில் நடனம் ஆடி அட்லீ, ரன்வீர் சிங் ஆகியோர் பட்டையை கிளப்பினர்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திகேயனுக்கும் சமீபத்தில் சென்னையில திருமணம் நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற தமிழ் பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த ஏப்ரல் 15 அன்று கோலாகலமாக நடந்த முடிந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அன்றைய தினம் வரவேற்பு விழாவும் களைகட்டியது. அதற்கு முக்கிய பங்கு வகுத்தவர்கள் இயக்குனர் அட்லீ, பாலிவுட் நாயகன் ரன்வீர் சிங் உடன் கூடவே ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கரும் தான்.
unknown nodeஅட ஆமாங்க…இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட ரன்வீர் சிங் மற்றும் அட்லீ ஆகியோர் காவாலா பாடல் மற்றும் மதுரை குலுங்க பாடலுக்கு நடனமாடி ஒரு கலக்கு கலக்கியுள்ளனர். இவர் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node