நடிக்க வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மகளை கொன்று தற்கொலை செய்த நடிகை !

பிரபல இந்தி ,மராத்தி சீரியல் நடிகை பிரக்ன்யா (40) மகள் ஸ்ருதி மற்றும் கணவர் பார்கர்  உடன் மகாராஷ்டிரா  மாநிலத்தில் புனே அருகில் உள்ள கல்வாவில் வசித்து வந்து

பிரபல இந்தி ,மராத்தி சீரியல் நடிகை பிரக்ன்யா (40) மகள் ஸ்ருதி மற்றும் கணவர் பார்கர்  உடன் மகாராஷ்டிரா  மாநிலத்தில் புனே அருகில் உள்ள கல்வாவில் வசித்து வந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பார்கர்  ஜிம்முக்கு சென்று விட்டு 9.30 மணிக்கு வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டில் மனைவி பிரக்ன்யா தூக்கில் தொங்கிய நிலையிலும் ,மகள் ஸ்ருதி படுக்கையில் உயிர் இழந்த நிலையிலும் கிடைப்பதை பார்த்த பார்கர்  அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக அருகில் இருந்தவர்களின் உதவிடம் இருவரையும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

unknown node

இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர் இருவரும்  ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்நிலையில் வீட்டில் பிரக்ன்யா எழுதிய கடிதம் ஓன்று கிடைத்தது. அதில் “என் மகளை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் ” என அந்த கடிதத்தில் எழுத பட்டு இருந்தது.

unknown node

கடந்த சில வருடங்களாக பிரக்ன்யாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. நடிக்க வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மகளையும் கொன்று அவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.