பிக் பாஸ் வீட்டுக்குள்ள பொண்ணுங்க எந்த வேலையும் செய்யுறது இல்ல! கிழித்தெறிந்த வத்திக்குச்சி வனிதா!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், வெளியே இருக்கும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் யூடியூபில் இந்த சீசனில் போட்டியாளர்கள் எப்படி எப்படி விளையாடுகிறார்கள் என்பதனை பற்றி விமர்சித்து பேசி வருகிறார்கள். குறிப்பாக வனிதா, கஸ்தூரி, சனம் ஷெட்டி ஆகியோர் இந்த சீசன் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்து பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், வனிதா மிகவும் கோபத்துடன் பிக் பாஸ் சீசன் 7 -லில் கலந்து கொண்டிருக்கும் பெண் போட்டியாளர்களில் பாதி பேர் எந்த வேலையும் செய்யுறது இல்ல என மிகவும் காட்டத்துடன் பேசி உள்ளார். இது குறித்து பேசிய வனிதா ‘வீட்டிற்குள் இருக்கும் ரவீனாவுக்கு என்னுடைய மகள் ஜோவிகாவுடன் ஒரு வயது தான் கூட இருக்கும்.
அந்த ஒரு வயதில் அவர் எதற்காக இப்படி சின்ன பொண்ணு மாதிரி நடந்து கொள்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் சரியாக வேலை செய்து கூட நான் பார்த்தது இல்லை. அவர் மட்டும் இல்லை பிக் பாஸ் வீட்டிற்குள் பாதி பொண்ணுங்க எந்த வேலையும் செய்வதே இல்லை. சரியாக வீட்டை பெறுக்குவது இல்லை, சரியாக பாத்ரூமை கழுவுவது இல்லை.
பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? விஜய் டிவி வெளியிட்ட புது வீடியோ!
சரியாக சமைப்பது கூட இல்லை. தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை அதனை கற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இல்லை. 7-வது வாரம் ஆக போகிறது ரவினா இன்னும் சமையல் செய்ய ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை. யாராவது சமையல் செய்யா சொன்னால் என்னுடைய வீட்டில் இதெல்லாம் பழகி கொடுக்கவில்லை என கூறுகிறார்.
இப்போது அவர் அவருடைய வீட்டில் இல்லை பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார். எனவே சமைத்து பழகுவது என்பது கட்டாயமான ஒரு விஷயம் எனவே தெரியவில்லை என்றால் கூட முயற்சி எடுக்கவேண்டும்” என ரவினாவையும் வனிதா கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இதனை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் உங்க பொண்ணுக்கு சமையல் தெரியுதுன்னு ரொம்ப பேசாதீங்க என்பது போல கூறி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025