பொங்கலை நோக்கி 'விடாமுயற்சி'... அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

படக்குழு பகிர்ந்த அந்த புகைப்படத்தில், நடிகர் அஜித் மற்றும் ரம்யா ஆகியோர் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலையில் காட்சியளிக்கின்றனர்

Vidaamuyarchi From Pongal 2025

சென்னை:நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி”படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை மாகில் திருமேனி இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகத் தெரிகிறது.

சமீபத்தில், இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் அஜித், நாயகி த்ரிஷா மற்றும் குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட படக்குழு, ‘விரைவில் வரும்’ என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில், படத்தில் தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா இணைந்துள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டு பட நிறுவனம் அறிவித்துள்ளது.

படக்குழு பகிர்ந்த அந்த புகைப்படத்தில், நடிகர் அஜித் மற்றும் ரம்யா ஆகியோர் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலையில் காட்சியளிக்கின்றனர். கடந்த முறை படக்குழு வெளியிட்ட புகைப்படங்களில் அஜித் கோட் சூட்டில் ஜேம்ஸ் பாண்டாக காட்சியளித்தார், த்ரிஷா சேலையில் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.

unknown node