ஹேக்கர்களால் முடக்கப்பட்ட நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்!

Actress Nasria's Instagram account has been disabled by hackers and she has said she will not respond to text messages for a few days.

நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதையடுத்து சில நாட்களுக்கு அதிலிருந்து வரக்கூடிய குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாமென நஸ்ரியா கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை நஸ்ரியா. திருமணம் ஆகிய பின்பும் சில படங்களில் நடிப்பதுடன் அவரது கணவர் பகத் பாசிலுடன் இணைந்து படங்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது வெளியூர் செல்லக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை இவர் வழக்கமாகக் கொண்டவர்.

தனது சமூக வலைதளப் பக்கங்களில் எல்லாம் சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள நஸ்ரியா சில ஜோக்கர்கள் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியுள்ளனர். எனவே எனது பேஜில் இருந்து வரக்கூடிய குறுஞ்செய்திகளுக்கு சில நாட்களுக்கு யாரும் பதில் அளிக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.