தெலுங்கில் அறிமுகமாகும் நடிகை நஸ்ரியா.! ஹீரோ யார் தெரியுமா.?

Actress Nazriya will next make her Telugu film debut with Vivek Atreya opposite Nani in "Ante Sundhariniki".

நடிகை நஸ்ரியா அடுத்ததாக நானிக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் பல திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா.அதன் பின் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ராஜா ராணி,வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா , நையாண்டி , உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ,பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

அதனையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு மலையாளத்தில் பிரபல நடிகராக திகழும் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் . அதன் பின்னர் பல படங்களை தயாரித்த இவர் கடைசியாக கணவருடன் இணைந்து ட்ரான்ஸ் எனும் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நஸ்ரியா தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார் .நானி நடிக்கும் “Ante Sundhariniki” என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் .நேற்றைய தினம் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தை மெண்டல் மதிலோ ,புரோச்சேவரேவருரா உள்ளிட்ட படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா இயக்குகிறார்.தற்போது ரசிகர்கள் பலர் நஸ்ரியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

unknown node