தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் வல்லமை கொண்ட இவர், கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி பல பிளாக் பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜாவான் திரைப்படத்தில் நடித்துள்ளார். அண்மையில், இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, தனது இரண்டு ஆண் குழந்தைகளை வளர்ப்பதிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அதிலும் குறிப்பாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் கேமராவை இயக்குவது போல நின்று கொண்டிருக்கிறார். அந்த பதிவில் ‘புதிய தொடக்கங்களின் மேஜிக்கை நம்புங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
unknown nodeNayan [Image source : Instagram/@Nayanthara]
இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தினால் ரசிகர்கள் அனைவரும் நயன்தாரா இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், நடிகை நயன்தாரா தற்போது நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘அன்னபூரணி’ மற்றும் டியூட் விக்கி இயக்கத்தில் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
