நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஒய்வு எடுத்து வருவதாக கூறியுள்ளார். மேலும், இவர் தற்போது கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளாராம்.
இந்நிலையில் இவர் தனது திருமணம் குறித்து கூறுகையில், ஒரு காலத்தில் எனது மனம் திருமணம் நோக்கி சென்றது. தற்போது எனக்கு அந்த எண்ணம் இல்லை என்றும், மேலும் அவர் கூறுகையில், எனக்கு துணையாக வருபவர்கள், என்னிடம் உண்மையாக இருக்க வேண்டும், என்னை உண்மையாக நேசிக்க வேண்டும்.
unknown nodeமேலும் அவர் கூறுகையில், என்னை கவுரவிக்க வேண்டும். என்னை கண்மூடித்தனமாக நம்ப வேண்டும். அவரது முதல் முக்கியத்துவம் நானாக இருக்க இருக்க வேண்டும். என்னை எப்போதும் சிரிக்க வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
source: tamil.cinebar.in