நடிகை ஜெயசித்ராவின் கணவர் மறைவு .!

Ganesh, the husband of Jayachitra, who starred in several films with Kamal and Rajini, and the father of composer Amrish have passed away.

கமல் ,ரஜினியுடன் பல படங்களில் நடித்த ஜெயசித்ராவின் கணவரும் , இசையமைப்பாளர் அம்ரிஷின் தந்தையுமான கணேஷ் காலமானார்.

தமிழ் , தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் ஜெயசித்ரா.இவர் சிவாஜி கணேசனுடன் பாரதவிலாஸ் ,பைலட் பிரேம்நாத் ஆகிய படங்களிலும் ,கமல் மற்றும் ரஜினியுடன் சினிமா பைத்தியம்,தேன் சிந்துதே , சதுரங்கம், வணக்கத்துக்குரிய வாத்தியாரே உள்ளிட்ட பல படங்களிலும் ,ஒரு சில தொடரிலும் நடித்துள்ளார்.

1983-ல் கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜெய்சித்ராவிற்கு அம்ரிஷ் என்ற மகன் உள்ளார் .அவர் இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது ஜெயசித்ராவின் கணவர் உடல்நல குறைவு காரணமாக திருச்சியில் காலமாகியுள்ளார் . தற்போது அவரது குடும்பத்தினருக்கு திரைத்துறையினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

unknown nodeunknown node