நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது : கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்

Default Image

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 திரைபபடம், பல சாதனைகளை படைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர்களான சச்சின், தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்படவுள்ளதாகவும், இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தன்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது தனக்கு பெருமையாக உள்ளதாக திரைத்துறை வட்டாரத்தில் முரளிதரன் கூறியதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்