சென்னை :நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், மகாநதி, பட்டியல் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்ற நிலையில், நேற்று காலமானார். ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தை நடத்தி வந்த தயாரிப்பாளர் மோகன் நடராஜனின் மறைவு சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பலரும் தங்களது சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு முதல் ஆளாக சென்று அவர் மரியாதை செலுத்தினார்.
நடிகர் சூர்யா நடித்த ‘வேல்’ என்ற படத்தை தயாரித்தவர் மோகன் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. வேல் படம் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. விஜய், அஜித், விக்ரம் படங்களையும் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
