சந்தானத்தின் "பிஸ்கோத்" படத்தின் வசூல் நிலவரம்...!

The movie Biskoth, starring actor Santhanam, which was released on Diwali last Saturday, has grossed Rs 2.87 crore in India and Rs 3.2 crore

நடிகர் சந்தானம் நடிப்பில்  கடந்த சனிக்கிழமை தீபாவளி தினத்தன்று வெளியான பிஸ்கோத் திரைப்படம் இந்திய அளவில் ரூபாய் 2.87 கோடியும் உலக அளவில் 3.2 கோடி வசூலையும் வசூலளித்துள்ளது.

இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் தீபாவளி விருந்தாக வெளியான பிஸ்கோத் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ், தாரா அலிஷா, சௌகார் ஜானகி, ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 நாட்கள் ஆன நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரங்களை குறித்து தக்வல்கள் வெளியாகியுள்ளது.

ஆம் , இந்த திரைப்படம் கடந்த 6 நாட்களில் இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் ரூபாய் 2.87 கோடி மற்றும் உலக அளவில் 3.2 கோடி வரை வசூலளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.