தூத்துக்குடிக்கு வந்த ரஜினிகாந்த்.! காரணம் என்ன தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும், 'தலைவர் 170' படத்திற்கு ‘வேட்டையன் ‘என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை ஜெய்பீம் படத்தை இயக்கியதன்

Rajinikanth - Thoothukudi

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும், ‘தலைவர் 170’ படத்திற்கு ‘வேட்டையன் ‘என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை ஜெய்பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனும் நடிக்கிறார். மேலும், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தை வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

சமீபத்தில், இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வருகை தந்தார். அவரது வருகை தெரிந்ததும் ரஜினிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், தூத்துக்குடியில் இருந்து கன்னிக்குமரிக்கு சென்றார், கன்னிக்குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இன்னும் சில நாட்களுக்கு முக்கிய காட்சிகள் படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.!

இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தன்னுடைய 171-வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.