பூஜையுடன் ஆரம்பமான நடிகர் கார்த்தியின் அடுத்த படம்.! இயக்குனர் யார் தெரியுமா.!

நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கவுள்ளார்.

நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கவுள்ளார்.

நடிகர் கார்த்தி தற்போது ரஷ்மிகா மந்தானாவுடன் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்புகள் முடிவடைந்த இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தினை பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . மேலும் இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார் .

இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.கார்த்தியின் அடுத்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கவுள்ளார். இவர் இரும்புத் திரை மற்றும் ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்தின் பூஜை தீபாவளி தினத்தன்று செய்யப்பட்டு , படத்தின் பாடலுக்கான பணிகளும் தொடங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது . மேலும் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகளை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node