கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சியதார்த்தம்.! விரைவில் காதலியை கரம் பிடிக்கிறார் காளிதாஸ்.!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். தந்தையைப் போலவே இவரும் பல படங்களில் நடித்துள்ளார். தனது 7

Kalidas Jayaram

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். தந்தையைப் போலவே இவரும் பல படங்களில் நடித்துள்ளார். தனது 7 வயதில் கொச்சு கொச்சு சந்தோசங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் அறிமுகமானார்.

அதனைத்தொடர்ந்து மீன் குழம்பும் மண்பானையும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான காளிதாஸ், நட்சத்திரம் நகர்கிறது, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

unknown node

Kalidas Jayaram

இதனையடுத்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற காளிதாஸ் ஜெயராமிடம், அவரது திருமணம் குறித்து கேள்விகள் எழுந்த போது, தனது நீண்ட நாள் காதலி மற்றும் மாடல் அழகியான தாரிணி காலிங்கராயரைத் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதை காளிதாஸ் ஜெயராம் தாரிணியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் ஒன்றை வெளியீட்டும் அறிவித்திருந்தார்.

இவர்கள் இருவரும் காதலிப்பது இரு வீட்டாருக்கும் தெரிந்திருந்தது. இதனால் சமீபத்தில் கூட ஓனம் பண்டிகையை முன்னிட்டு தாரணி, காளிதாஸ் ஜெயராமின் குடும்பத்துடன் இணைந்து பண்டிகையை கொண்டாடினார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

unknown node

Kalidas Jayaram

இந்நிலையில், சென்னையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், நேற்று மாலை (10.11.2023) காளிதாஸ் மற்றும் தாரிணி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது நிச்சயதார்த்த விழாவில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதோடு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்பது உறுதியாகி உள்ளது. தற்போது இந்த அழகான ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.