பூஜையுடன் தொடங்கிய நடிகர் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் பொதுவாக காதல் கதை கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார்.இவர் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் ரசிகர்களிடையே

நடிகர் ஹரிஷ் கல்யாண் பொதுவாக காதல் கதை கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார்.இவர் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இவர் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து இவருடைய அடுத்த படம் பூஜையுடன் இன்று துவங்கப்பட்டது.

மேலும் இவர் முதன் முறையாக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த படம் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் வெளிவந்த பெல்லி சூப்புலு என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node