நடிகை கௌதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்- நடிகர்,அரசியல்வாதி கமல் பேட்டி

நடிகை கவுதமி 13 ஆண்டுகளாக நடிகர் கமலுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருடன் இருந்து பிரிந்து தற்போது அவரும் அவருடைய

நடிகை கவுதமி 13 ஆண்டுகளாக நடிகர் கமலுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருடன் இருந்து பிரிந்து தற்போது அவரும் அவருடைய மகளும் தனிமையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திலும், கமல் நடித்த மற்ற தயாரிப்பு நிறுவனங்களிலும் தாம் பணியாற்றியமைக்கு இன்று வரை ஊதியம் வழங்கவில்லை என்றும் அந்த ஊதியம் தன் வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர் நேற்று முன்தினம் ட்விட்டரில் கருத்து தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

unknown node

இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மும்பை சென்று திரும்பிய நடிகர் கமல்ஹாசன், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கௌதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் தன் கம்பெனியில் இருக்கும் அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்!” என கூறியுள்ளார்.