இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து! க்ரைன் ஆபரேட்டர் ராஜா மீது வழக்கு பதிவு!

க்ரைன் ஆபரேட்டர் ராஜா மீது 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்.

க்ரைன் ஆபரேட்டர் ராஜா மீது 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2 திரைப்படம். இதற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி  சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும்  பணி நடைபெற்று வந்தது.

இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் ராஜனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.