விவாகரத்து இன்ஸ்டா பதிவுக்கு லைக் போட்ட அபிஷேக் பச்சன்.. வதந்திக்கு சூசக பதிலா?

அபிஷேக் பச்சன் : பிரபல பாலிவுட் ஜோடிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் 2007-ல் திருமணம் செய்து கொண்டன. அவர்களுக்கு 2011-ல் மகள் ஆராத்யா பிறந்தார், சமீப காலமாக இவர்களது தனிப்பட்ட உறவுகள் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவுவது வழக்கம்.
அந்த வகையில், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரிநது விவாகரத்து செய்ததாக ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு கூட, மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் தனது குடும்பம் என தனித்தனியாக வருகை தந்ததால் இந்த வதந்தி மேலும் வலுவானது.
இருப்பினும், இது வரை இருவருமே இதற்கு பதிலளிக்கவில்லை. தற்பொழுது, ஐஸ்வர்யாவுடனான கருத்து வேறுபாடுகளுக்கு இடையே அபிஷேக் பச்சன் விவாகரத்து குறித்து மேலும் பேசும்படி தூண்டியுள்ளார்.
ஆம், விவாகரத்து குறித்து எழுத்தாளர் ஹீனா கண்டேல்வால் எழுதிய பதிவை அபிஷேக் பச்சன் லைக் செய்துள்ளார். அபிஷேக்கின் இந்த சூசக செயலால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர் மற்றும் பயனர்களும் பல்வேறு விதமாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அபிஷேக் லைக் செய்த அந்த பதிவில், “விவாகரத்து என்பது யாருக்கும் எளிதானது அல்ல. வயதான தம்பதிகள் தெருவைக் கடக்கும்போது கைகோர்த்து நிற்கும் அந்த மனதைக் கவரும் வீடியோக்களை மீண்டும் உருவாக்குவதைக் கனவு காணாதவர் யார்?”என்று நீண்ட வரிகளில் எழுதப்பட்டிருந்தது.
View this post on Instagram
ஆனால் இது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள், அபிஷேக்குக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையில் விரிசல் இருப்பதாக ஊகித்தாலும், சிலர் ”அது பொதுவான ‘லைக்’ ஆக இருக்கலாம் என்றும், அவர்களுடைய வாழ்க்கைக்கும் இதற்குச் சம்பந்தம் இல்லை” என்றும் பதிவிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025