இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு...‘காந்தாரா’ படத்தை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, எந்தெந்த நல்ல படங்கள் வெளியாகிறதோ அந்த படங்களை பார்த்துவிட்டு பார்த்துவிட்டு படக்குழுவினரை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, எந்தெந்த நல்ல படங்கள் வெளியாகிறதோ அந்த படங்களை பார்த்துவிட்டு பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில் தொடர்பு கொண்டு பாராட்டி விடுவார்.

unknown node

Rajinikanth Smile [Image Source: Twitter]

குறிப்பாக இந்த ஆண்டு வெளியான டான், இரவின் நிழல், ராக்கேட்ரி, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களை பார்த்துவிட்டு தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் பாராட்டி இருந்தார். அந்த வகையில், தற்போது கன்னடத்தில் வெளியான  “கந்தாரா” திரைப்படத்தை ரஜினி பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

unknown node

Rajinikanth Praised The Movie Gandhara [Image Source: Twitter]

இது குறித்து ரஜினி வெளியிட்டுள்ள பதிவில் ‘தெரிந்ததை விட தெரியாதது அதிகம் ” இந்த விஷியத்தை கந்தாரா திரைப்படம் சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். என் உடல் சிலிர்த்தது. ரிஷப் ஷெட்டி, எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என உங்கள் பணி சிறப்பாக இருந்தது. இந்திய சினிமாவின் சிறப்பான படத்தை கொடுத்ததற்காக  ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், படகுழுவினருக்கும் என்னுடைய  வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ரிஷப் ஷெட்டி என்பவர் இயக்கி நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இன்னும் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பல சாதனைகளை படைத்தது வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.