சந்தானத்தின் மீண்டும் ஓர் குளுகுளு.? வித்தியாசமான கதைக்களத்தில் “ஏஜென்ட் கண்ணாயிரம்” ட்ரைலர் இதோ…

Default Image

குளு குளு படத்தின் தோல்வியை தொடர்ந்து நடிகர் சந்தானம் அடுத்ததாக இயக்குனர் மனோஜ் பீதா என்பவர் இயக்கத்தில் “ஏஜென்ட் கண்ணாயிரம்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி “ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா” படத்தின் ரீமேக் ஆகும்.

AgentKannayiram Trailer
AgentKannayiram Trailer [Image Source: Twitter]

இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை ரியா சுமன் நடித்துள்ளார். புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, இ ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி, ஆதிரா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

AgentKannayiram Trailer
AgentKannayiram Trailer [Image Source: Twitter]

இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க சந்தானம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது படத்திற்கான சூப்பரான ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன்- கோடிக்கணக்கில் செலவு வைத்த வைகைப்புயல் வடிவேலு.! செம கடுப்பில் தயாரிப்பு நிறுவனம்.!

AgentKannayiram Trailer
AgentKannayiram Trailer [Image Source: Twitter]

ட்ரைலரில் வரும் காட்சிகள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு ரசிக்கும் படி இருக்கிறது. ஆனால், இதற்கு முன்பு சந்தானம் நடிப்பில் வெளியான ‘குளு குளு’ படத்தின் டிரைலரம் இதே பாணியில் தான் இருந்தது. எனவே ரசிகர்கள் சற்று ஷாக்கில் உள்ளனர். படம் வெளியான பிறகு காமெடி காட்சிகள் எல்லாம் ரசிக்கும் படி இருக்கிறதா மக்களுக்கு படம் பிடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்