குளு குளு படத்தின் தோல்வியை தொடர்ந்து நடிகர் சந்தானம் அடுத்ததாக இயக்குனர் மனோஜ் பீதா என்பவர் இயக்கத்தில் “ஏஜென்ட் கண்ணாயிரம்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி “ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா” படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை ரியா சுமன் நடித்துள்ளார். புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, இ ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி, ஆதிரா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் […]