ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!
பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஷூட்டிங் போன இடங்களில் எல்லாம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று ஆந்திர மாநில திரைப்பட பெண் நடன கலைஞர், ஜானி மாஸ்டர் மீது, ராய்துருக்கம் காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜானி மாஸ்டர் 2019ல் ஒரு பாலியல் புகாரில் 6 மாதங்கள் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், ரவுடி பேபி, மேகம் கருக்காதோ ரஞ்சிதமே, தீ தளபதி, ஜாலியோ ஜிம்கானா, காவாலா உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்தவர்.