8 வருட காத்திருப்பு.! அம்மா அப்பா ஆகப்போகும் சரவணன்-மீனாட்சி.! வளைகாப்பு விழா படு ஜோர்...

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இந்த

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இந்த சீரியலில் அடுத்தடுத்த சில சீசன்கள் வந்தாலும் கூட, பலருக்கும் முதல் சீசன் தான் பிடிக்கும்.

unknown node

இந்த சீரியலில் நடித்திருந்த செந்தில் – ஸ்ரீஜாவின் ஜோடி ரசிகர்கள் பலருக்கும் பிடித்துப்போக இந்த ஜோடி உண்மையில் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததனர். ரசிகர்கள் எதிர்பார்த்த படியே ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.

இதையும் படியுங்களேன்-நானே வருவேன் திரைப்படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

unknown node

திருமணத்தை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மாப்பிள்ளை” தொடரில் நடித்து வந்தனர். அந்த சீரியலிலும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இவர்கள் இருவரும் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி அடிக்கடி அதில் வீடியோக்களை பதிவிட்டு  வருகிறார்கள்.

unknown node

இந்த நிலையில், தற்போது 8 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீஜா கர்ப்பமாக இருக்கிறார். ஸ்ரீஜாவுக்கு வளைகாப்பு போட்ட புகைப்படத்தை செந்தில் மகிழ்ச்சியாக அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார்.