60 டிக்கெட் ஒரே நபர்.! கமலின் வெறித்தனமான ரசிகர் இவர் தான் போல..,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன்நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், போன்ற பல

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன்நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

unknown node

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சூர்யா கௌரவத் தோற்றதில் நடிக்கிறார். படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.

unknown node

இந்த நிலையில், படம் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகிறார்கள்.  4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் படம்  திரையரங்குகளில் வெளியாகிறது என்பதால், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் விக்ரம் படம் பார்க்க காத்துள்ளனர்.

unknown node

இதனையடுத்து, கமலின் தீவிர ரசிகர் ஒருவர் விக்ரம் படம் பார்ப்பதற்கு 1 இல்லை 2 இல்லை மொத்தமாக 60 டிக்கெட்களை எடுத்துள்ளார். அவரின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கமலின் வெறித்தனமான ரசிகர் இவர் தான் போல என கூறி வருகிறார்கள்.