அடேங்கப்பா! 2000 முதலைகளா? ஆண்கள் ஜாக்கிரதை!

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஆண்கள் ஜாக்கிரதை. இப்படத்தை இயக்குனர் முத்து மனோகரன் இயக்கியுள்ளார்.

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஆண்கள் ஜாக்கிரதை. இப்படத்தை இயக்குனர் முத்து மனோகரன் இயக்கியுள்ளார். இப்படத்தில், முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா, ரேஸ்மி, மூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும் தான் சிதையும், ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் சமுதாயமே பாதிக்கப்படும் என்ற கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஒரு வித்தியாசமான திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் 2000 முதலைகளை கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுதான்.