அடி தூள்...19 நாட்களில் 100 கோடி..! வசூலில் மாஸ் காட்டும் "திருச்சிற்றம்பலம்"...!

நடிகர் தனுஷ் கடந்த ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த

நடிகர் தனுஷ் கடந்த ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி இருந்தார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

unknown node

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் பிரியா பவானி ஷங்கர், ராசிக்கன்னா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தில் நடித்தவர்கள் அனைவருமே தனக்கு  கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாகவே நடித்தார்கள் என்றே கூறலாம்.

இதையும் படியுங்களேன்-இளம் நடிகையுடன் ரகசிய திருமணம்.? துள்ளலான இசையமைப்பாளரின் சீக்ரெட்ஸ் இதோ…

unknown node

படம் வெளியாகி இன்றுடன் 20 நாட்கள் ஆன நிலையிலும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

unknown node

அதன்படி, படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல்  வசூல் செய்து தனுஷிற்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்துள்ளது. திருச்சிற்றம்பலம் 100 கோடி வசூல் செய்துள்ளதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் நாளை நானே வருவேன் படத்தின் முதல் பாடலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.