புல்லட் ரயிலுக்கான நிலம் தயார்!
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை தொடங்க உள்ள புல்லட் ரயிலுக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ரா அரசு இந்த நிலத்தை ஹைஸ்பீட் ரயில்வே கார்பரேசன் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே பல திட்டங்கள் விரைவாக நிறைவேறி வருவதாகவும் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஆட்சிக்காலங்களில் தொடங்கப்பட்ட சில திட்டங்கள் 25 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டையும் அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்த அவலம் இல்லை என்றும் பியூஷ் கோயல் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.