சென்னை :சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து சரிந்து வரும் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (03-06-2024) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்குரூ.352 குறைந்து ரூ.53,328க்கும், கிராமுக்கு 44 குறைந்து ரூ.6,666க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,088க்கும், கிராமுக்கு ரூ.7,136-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.97.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
![Gold Price [file image]](/_next/image?url=https%3A%2F%2Fmedia.dinasuvadu.com%2Fuploads%2F2024%2F04%2FGold-Price-file-image-3.webp&w=3840&q=75)