சென்னை :ஆபரணத்தங்கத்தின் விலை இன்று எந்தவித மாற்றமின்றி விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனையான நிலையில், இன்றைய தினம் மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (29-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.53,720-க்கும், கிராமுக்கு ரூ.6,715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும்,24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ. 57,360 ஆகவும் கிராம் ஒன்று ரூ.1 குறைந்து ரூ.7,170 ஆகவும் விற்பனையாகிறது.
unknown nodegold price [file image]அதே போல், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராமுக்கு ரூ.93.50க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.93,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
