வார தொடக்கத்திலேயே உயர்ந்த தங்கம் விலை... இன்று சவரனுக்கு எவ்வளவு?

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,781-க்கும், ஒரு சவரன் ரூ. 70,248-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold price

சென்னை :கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய தினம் 1 கிராம் தங்கம் ரூ.8,040க்கும், 1 சவரன் ரூ.64,320க்கும் விற்பனையானது. அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் 1 கிராம் தங்கம் விலை ரூ.100 ஆகவும் , 1 சவரன் ரூ.800 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று (மார்ச் 10) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,050க்கும், சவரன் ரூ.64,400க்கும் விற்பனையாகிறது.

மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,781-க்கும், ஒரு சவரன் ரூ. 70,248-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,08,000க்கும் விற்பனையாகிறது. வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை உயர்வுடன் தொடங்கியுள்ளது.