தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

gold price

Gold Price:கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை ஆகிறது. அதன்படி, கடந்த 3 நாளில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (04-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,600க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86.50க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (03-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615க்கும் விற்பனையானது. அதேநேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, கிராம் ரூ.87க்கும், கிலோ ரூ.87,000க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.