மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

gold price

சென்னை:ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 4 நாள்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (15-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,800-க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,725-க்கும் விற்பனையாகிறது. நேற்று கிராமுக்கு ரூ.35ம், சவரனுக்கு ரூ.280ம் குறைந்தது. அதேசமயம், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.91-க்கும், கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனையாகிறது.

சென்னையில்நேற்றைய நிலவரப்படி (14-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,520க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,690க்கும் விற்பனையானது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.90.70க்கும், கிலோ வெள்ளி ரூ.90,700க்கும் விற்பனை செயப்பட்டது குறிப்பிடத்தக்கது.